Propellerads
Navigation

சூடு பிடித்தது 'தொண்டன்' வியாபாரம்

சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'அப்பா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன நிலையில் அவர் இயக்கி நடித்துள்ள அடுத்த படம் 'தொண்டன். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

சமூக கருத்துக்களுடன் கூடிய 'தொண்டன்' திரைப்படம் வரும் மே 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வசுந்தரதேவி சினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் சேலம் பகுதி ரிலீஸ் உரிமையை சமுத்திரக்கனியே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமுத்திரக்கனி, விக்ராந்த், சுனைனா, சூரி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் ரமேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: