பிக்கு படத்தை தொடர்ந்து இர்பான் - தீபிகா படுகோன மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். விஷால் பரத்வாஜ் தயாரிப்பில் அவரது உதவியாளர் ஹனி இயக்க உள்ளார்.
இப்படம் மாபியா குயின் ரஹிமா கான் எனும் சப்னா டிடியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிம்மை கொல்ல வேண்டும் என்று துடித்த, கடைசியில் கொடூரமாக கொல்லப்பட்ட ரஹிமாவின் வாழ்க்கையை தான் விஷால் பரத்வாஜ் படமாக இயக்குகிறார்.
இதில் ரஹிமா ரோலில் தீபிகா படுகோனே நடிக்க இருக்கிறார். அவருக்கு உதவும் லோக்கல் ஹேங்ஸ்டர் ரோலில் இர்பான் கான் நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
Post A Comment: