இந்திய கிரிக்கெட்டின் லிட்டில் மாஸ்டர் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை சச்சினின் கிரிக்கெட் ரசிகர்கள் உள்பட அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் சச்சின் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருந்தார். சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கு சச்சின் தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் 'நன்றி தலைவா! நீங்கள் இந்த படத்தை தமிழில் பார்த்து ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
சச்சின் தெண்டுல்கர், வீரேந்திர சேவாக், அர்ஜூன் தெண்டுல்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை '200 நாட்-அவுட் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
Post A Comment: