கோலிவுட் திரையுலகில் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய அருள்நிதி நடித்த 'மெளன குரு', 'டிமாண்டி காலனி' போன்ற படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள படம் 'பிருந்தாவனம். பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டு 'யூ' சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 130 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரம் பத்து நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அருள்நிதி, தான்யா, விவேக், செல்முருகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். விவேக் ஆனந்த் ஒளிப்பதிவில், டி.எஸ்.ஜே படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வான்சன் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து மிக விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
Post A Comment: