Propellerads
Navigation

'பாகுபலி 2' படக்குழுவினர்களுக்கு உதவிய தயாரிப்பாளர் சங்கம்


பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பாகுபலி 2 படத்தை ரிலீஸ் செய்யும் ஸ்ரீ கிரீன் புரொடக்சன் நிறுவனத்தின் மீது ஏசிஇ என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இதன்படி ஸ்ரீகிரீன் புரொடக்ஷ்ன் நிறுவனத்தின் சரவணன் என்பவர் பாகுபலி-2 படத்திற்காக தன்னிடம் ரூ.1.8 கோடி கடன் வாங்கியிருந்தாகவும், படம் வெளியீட்டிற்கு முன்பாக ரூ.10 லட்சம் சேர்த்து மொத்த பணத்தையும் திருப்பி தந்துவிடுவதாகவும் தனது மனுவில் கூறியிருந்தார். ஆனால் தற்போது படத்தை வேறு ஒருவருக்கு மாற்ற முயற்சிப்பதாகவும், ஆகவே, எங்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாவிடில் 'பாகுபலி 2' படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்தவாரம் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி, படத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும் இதுதொடர்பாக விநியோகஸ்தர் சரவணன் வருகிற 18-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறி, வழக்கை ஏப்ரல் 18-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதன்படி நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பினரும் பேசி சமாதானம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்த பிரச்சனையை சுமூகமாக முடிக்கப்பட்டதில் பெரும்பங்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு இருந்ததால் பாகுபலி 2 படக்குழுவினர் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.
Share
Banner

Post A Comment: