மேலும், சூரி, ராதிகா சரத்குமார், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், தம்பி ராமையா, கோவை சரளா ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் அட்லி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள் புரொடக்ஷன்’ மூலம் தயாரித்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இதற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து சென்சாருக்கு ரெடியாகவுள்ளதாம். இதுவும் தமிழ் சினிமாவில் ட்ரெண்டு அடித்து கொண்டிருக்கும் ஹாரர் காமெடி ஜேனராம். ஏற்கெனவே படக்குழுவால் ட்விட்டப்பட்ட பர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது. இந்நிலையில், படத்தின் ஆடியோ மற்றும் டிரையிலரை இன்று மாலை கமல்ஹாசன் வெளியிட்டார். இந்த டிரையிலர் & பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரல் ட்ரெண்டு அடித்து வருகிறது. படத்தை வருகிற மே 19-ஆம் தேதி வெளியிட ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ டீம் திட்டமிட்டுள்ளது.
Post A Comment: