Propellerads
Navigation

ஒரு ஹீரோவுக்கு எதுக்கு நான்கு ஹீரோயின்?

ஜோதிகா நடித்த 'மகளிர் மட்டும்' திரைப்படத்தின் பாடல்கள்  சென்னை சத்யம் திரையரங்கில் வெளியானது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஜோதிகா பெண்களை திரைப்படங்களில் மரியாதையாக காட்டும்படி வேண்டுகோள் விடுத்தார். அவர் மேலும் கூறியதாவது:

இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் வீட்டு பெண்கள், உங்கள் அம்மா, தங்கை, தோழிகள் போன்ற கேரக்டரை நடிகைகளுக்கு தாருங்கள். திரைப்படங்களை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும். திரைப்படங்களில் வரும் டயலாக், ஸ்டைல் , உடை ஆகியவற்றை கோடிக்கணக்கான இளைஞர்கள் பின்பற்றுவார்கள். எனவே திரைப்படங்கள் பொறுப்புடன் தயாரிக்கப்பட வேண்டும்.

மேலும் பெண்களூக்கு அறிவாளியான கேரக்டர்கள் கொடுங்கள். வெறும் இரட்டை அர்த்த வசனங்களுக்கு மட்டும் நடிகையை பயன்படுத்த வேண்டாம். ஹீரோ பின்னாடியே சுற்றிக்கொண்டு ஐ லவ் யூ என்று சொல்லும் கேரக்டர்களை தயவு செய்து நிறுத்தி கொள்ளுங்கள். அதேபோல் ஒரு ஹீரோவுக்கு நான்கு ஹீரோயின்கள் வைத்தால் இளைஞர்களும் நான்கு கேர்ள் பிரண்ட் வைத்து கொள்ள முயற்சி செய்வார்கள். ஒரு படத்தில் ஒரு ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் போதும். இரண்டு, மூன்று, நான்கு என போய்க்கொண்டே இருப்பது நல்லதல்ல' என்று கூறினார்.
Share
Banner

Post A Comment: