கோலிவுட் திரையுலகில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்த நடிகர் சிவகார்த்டிகேயன், 'ரஜினிமுருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய படங்களின் வெற்றிக்கு பின்னர் தற்போது 'வேலைக்காரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதன்முதலாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் ரிலீஸ் தேதிகளை தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டுடியோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வரும் ஜூன் 5ஆம் தேதி ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என்றும் செப்டம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வருகிறார். ராம்ஜி ஒளிப்பதிவில், விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment: