சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ;2.0' திரைப்படத்தின் படப்பிடிப்பு 95% முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் ரஜினி ரசிகர்கள் இந்த ஆண்டு 2.0 தீபாவளியை கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது. உலக தரத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருவதாகவும், இந்த பணிகளின் காலதாமதம் காரணமாக இந்த படம் தீபாவளி தினத்திற்கு பதிலாக வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். எனவே இந்த படம் அடுத்த ஆண்டு குடியரசு தின விடுமுறையில் வெளிவரவுள்ளது.
2D, 3D, ஐமேக்ஸ் ஆகிய டெக்னாலஜியில் உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: