நாய்கள் ஜாக்கிரதை', 'ஜாக்சன் துரை', 'கட்டப்பாவ காணோம்' படங்களுக்கு அடுத்து சிபிராஜ் தற்போது 'நாளைய இயக்குனர்' புகழ் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் சிபிராஜூக்கு ஜோடியாக நிகிலா விமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சசிகுமாரின் 'கிடாரி', 'வெற்றிவேல்' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு 'ரங்கா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதே டைட்டிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா நடிப்பில் கடந்த 1982ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ராம்ஜீவன் இசையமைப்பில், ஆனந்த் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய் செல்லையா என்பவர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
Post A Comment: