Propellerads
Navigation

என்னை தயவுசெய்து விட்டுவிடுங்கள்

பிரபல பாடகி சுசித்ராவின் சமூக வலைத்தளத்தில் பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோலிவுட்டே பெரும் பரபரப்பு அடைந்துள்ள நிலையில் பாடகி சுசித்ரா இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் போன் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

இந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

இரண்டு வாரங்களுக்கு முன்பே என்னுடைய மொபைல் போன், சமூக வலைத்தளம் ஆகியவை ஹேக் செய்யப்பட்டு அதில் சில குறிப்பிட்ட நடிகர்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை ஹேக்கர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து நான் தனியார் சைபர் க்ரைம் துப்பறியும் நிறுவனத்திடம் கூறி விசாரணை செய்ய கூறியிருந்தேன். அவர்கள் கொடுத்த அறிக்கையின்படி சென்னையில் உள்ள ஒரு மொழிமாற்று நிறுவனம் என்று கூறிக்கொள்ளும் ஒரு ஹேக்கர் அலுவலகம்தான் இந்த வேலையை செய்து வருகிறது என்பதை கண்டுபிடித்து விட்டோம்.

நேற்று இரவு முழுவதும் செய்யப்பட்ட பதிவுகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையில் நான் நேற்று இரவு ரிகார்டிங் முடித்துவிட்டு தூங்கிவிட்டேன். இன்று காலை தனுஷ் அலுவலகத்தில் இருந்து ஒருவர் போன் செய்து என்னுடைய சமூக வலைத்தளம் மீண்டும் ஹேக் செய்யப்பட்டு அதில் சர்ச்சைக்குரிய பதிவுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார் உடனடியாக நான் அனைத்து சர்ச்சைக்குரிய டுவீட்டுக்களையும் டெலிட் செய்துவிட்டேன். இதற்கான விளக்கத்தையும் நான் அதே சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துவிட்டேன்.

இந்த பிரச்சனை குறித்து எந்த காவல்நிலையத்தில் யாரிடம் புகார் செய்வது என்று தெரியவில்லை. நான் போன் செய்து கேட்ட காவல்நிலையங்கள் அனைத்தும் எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை. மேலும் நான் நேரில் சென்று புகார் அளிக்க முடியாத நிலையிலும் உள்ளேன்.

ஹேக்கர்களிடம் நான் வேண்டி கேட்டுக்கொள்வது ஒன்று மட்டுமே. என்னை தயவுசெய்து விட்டுவிடுங்கள். எனக்கும் அந்த நடிகர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, அவர்களை பற்றி நல்லதையோ அல்லது கெட்டதையோ நான் சொன்னதே இல்லை' என்று கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: