கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் உள்பட பிற மொழி படங்கள் டப் செய்து கர்நாடகாவில் வெளியிட கன்னட திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ் படங்கள் வெளியிடும் திரையரங்குகள் முன் அவ்வப்போது ஆர்ப்பாட்டமும் நடந்தது உண்டு.
இந்நிலையில் அஜித் நடிப்பில் கவுதம்மேனன் இயக்கிய சூப்பர் ஹிட் வெற்றி படமான 'என்னை அறிந்தால்' திரைப்படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு 'சத்யதேவ்' என்ற பெயரில் இன்று கர்நாடகத்தில் வெளியாகிறது.
ஆனால் டப்பிங் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஒரு குழுவினர் இன்று சத்யதேவ்' வெளியாகும் திரையரங்குகள் ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரபல கன்னட நடிகர் ஜக்கேஷ் என்பவர், 'சத்யதேவ்' படத்தை கர்நாடக திரையரங்குகளில் வெளியிடக்கூடாது என்று எச்சரித்துள்ளார். அதையும் மீறி வெளியிடும் தியேட்டர்களை தீயிட்டு கொழுத்துவேன் என்றும், அதற்காக சிறைக்கு செல்லவும் தயார் என்றும் கூறியுள்ளார். நடிகர் ஜக்கேஷின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.
மேலும் வாட்டாள் நாகராஜ் தலைமையில் வரும் இம்மாதம் 11-ஆம் தேதி இதற்காக பேரணி ஒன்றும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Post A Comment: