' 7 வருடங்கள் முடிந்து விட்டன, நான் சினிமாவுக்கு வந்து, குடிசையிலிருந்து கோபுரம் சென்றவர்களின் கதை போன்றது தான் என்னுடையதும். அதில் எனக்கான உழைப்பு, பாதுகாப்பின்மை, வெற்றி, தோல்வி, ஏமாற்றம், நிராகரிப்பு, வலி, சோகம், புகழ், செல்வம் ஆகிய எல்லாம் இருந்தது” என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
சினிமாவுக்கு வந்து திங்கட்கிழமையுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகிறன. இதையொட்டி அவர் தனது டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
“இவ்வளவு நாள் அனுபத்தில் நான் கற்றது என்னவென்றால் செல்வமும், வெற்றியும் இருந்தால் மட்டுமே மகிழ்ச்சி கிடைத்து விடாது என்பதுதான். இந்த 7 வருடங்களில் நான் படப்பிடிப்பில் இல்லாத நாட்களே கிடையாது. என்னை குறித்து வந்த விமர்சனங்கள், வதந்திகள் எதுவும் என்னை பாதிக்கவில்லை.
இதற்கு காரணம் என் சினிமாவும், என்னை நேசிக்கிற மக்களும் தான். இதை நான் பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறேன். வாழ்நாள் முழுவதும் நானும் அந்த மக்களுக்கு என் நன்றியை திருப்பி கொடுத்துக் கொண்டிருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Post A Comment: