மார்ச் 3ஆம் தேதி டிஜிட்டல் வெர்ஷனில் மீண்டும் ரிலீஸ் ஆன சூப்பர் ஸ்டாரின் 'பாட்ஷா' புதிய படங்களின் ஓப்பனிங் வசூலை பின்னுக்கு தள்ளி மீண்டும் வசூலை குவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் இந்த படத்தின் வசூலை பார்த்து கோலிவுட்டே ஆச்சரியப்பட்டுள்ளது.
சென்னையில் பாட்ஷா திரைப்படம் 14 திரையரங்க வளாகங்களில் 102 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.39,06,210 வசூல் செய்துள்ளது. அனைத்து திரையரங்குகளிலும் 85%க்கும் மேல் பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை வென்றுவிட்டதாகவும், வெல்ல போவதாகவும் கூறிக்கொள்ளும் நடிகர்களுக்கு ரஜினி மட்டுமே ஒரே சூப்பர் ஸ்டார் என்பதை புரிய வைத்துள்ளது தலைவரின் இந்த டிஜிட்டல் பாட்ஷா.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: