Propellerads
Navigation

இளையராஜாவின் முடிவு தவறானது.

இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இனி இளையராஜா இசை அமைத்த பாடல்களை பாட மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

இது இசையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இளையராஜாவின் தம்பியும், இசை அமைப்பாளருமான கங்கை அமரன் இது குறித்து கூறியிருப்பதாவது:

இளையராஜாவின் முடிவு தவறானது. என்னுடைய பாடல்களை யாரும் கேட்காதீர்கள், பாடாதீர்கள் என்று மாணிக்கவாசகர், வள்ளலார் போன்றவர்கள் கூட சொன்னதில்லை, எதற்காக இந்த ஆசை. இனிமேலும் சம்பாதித்து என்ன செய்யப்போகிறீர்கள். அந்தளவுக்கா பணம் கஷ்டம் வந்துவிட்டது. இசையை வியாபாரமாக்க கூடாது.

பாடலுக்கான சம்பளத்தை ஏற்கெனவே வாங்கிவிட்டோம். நம்மை பின்பற்றி நம் பாடல்களை பாடுகிறார்கள், கேட்கிறார்கள் என்றால் நமக்குத்தானே அது பெருமை. நீங்கள் பாடல்களுக்கு இசை அமைத்ததே மக்கள் பாடுவதற்குத்தான். பாடக்கூடாது என்றால் எதற்கு இசை அமைக்க வேண்டும், அசிங்கமாக உள்ளது என்று தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்திருக்கிறார் கங்கை அமரன்.


Share
Banner

Post A Comment: