ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார்
மும்பை:பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார்.பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த கிருஷ்ணராஜ் ராய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் லெப்டினட் ஜெனரல் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணராஜ் ராய் உடல் மும்பையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. அருகில் ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக்பச்சன், நைனா பச்சன் மற்றும் அவரது கணவர் குணால் கபூர், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் பாலிவுட் நடிகர் ரந்தீர் கபூர் ஆகியோர் உள்ளனர்.
Post A Comment: