விவாகரத்து செய்யபோவது இல்லை ஆலியா சித்திக்
பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் நவாசுதீன் சித்திக்கும் ஒருவர். சில தினங்களுக்கு முன் நடிகர் நவாசுதீன் சித்திக்கும் அவரின் மனைவி ஆலியா சித்திக் இடையில் பிரச்சனை என்று இருவரும் விவாகரத்து செய்ய போவதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் ஆலியா சித்திக் இந்த செய்தியை முழுமையாக மறுத்து இருக்கிறார். இவ்வாறான வதந்தியான செய்திகளை கேட்டதும் ஆலியா மிகவும் உருக்கமான ஒரு பதிவை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
இதைப்பற்றி ஆலியா தனது பேஸ்புக்கில் ...."இதனை ஆண்டுகள் உன்னோடு மிகவும் அழகான வாழ்கை வாழ்ந்து வருகிறேன். நம் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தந்தையாகவும், எனக்கு நல்ல காதலனாகவும் வாழ்ந்து வருகிறாய். உன் கைகளில் இருக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். இனி வரும் காலங்களையும் நாம் இணைந்து கடக்க கடவுளிடம் வேண்டுகிறேன்" என்றுள்ளார்
Post A Comment: