மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதிராவ் ஹைதி நடித்துள்ள 'காற்று வெளியிட' திரைப்படம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் டிரைலரை பார்த்த பலரும் இந்த படம் 'ரோஜா' சாயலில் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தனர்.
இந்த சந்தேகத்தை உறுதி செய்வதை போல பிரிட்டிஷ் சென்சார் போர்டு (BBFC) இந்த படத்தை சென்சார் செய்து அதன் சர்டிபிகேட்டில் இந்த படத்தின் கதையை ஒன்லைனில் தெரிவித்துள்ளனர். இதன்படி இந்த படத்தின் கதை 'ஒரு ராணுவ பைலட் போர்க் கைதியாக பிடித்து வைக்கப்படுகிறார். இந்தியாவில் மருத்துவராக இருக்கும் தனது காதலியைப் பற்றி நினைத்துப் பார்க்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளது.
'ரோஜா' படத்திலும் ஒரு சாப்ட்வேர் எஞ்சினியர் கடத்தப்பட்ட நிலையில் தனது மனைவியை நினைத்து பார்ப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே BBFC சென்சார் அறிவிப்பால் 'ரோஜா' படத்தின் சாயலில் 'காற்று வெளியிடை' என்பது உறுதியாகியுள்ளது.

Post A Comment: