இயக்குனர் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'குட்டிப்புலி' திரைப்படத்தை அடுத்து மீண்டும் அதே கூட்டணி இணைந்துள்ள படம் 'கொடிவீரன்'. வழக்கம்போல் முத்தையாவின் கிராமத்து ஆக்சன் படமான இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜூன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே மணி ரதனம் இயக்கிய ’கடல்’ படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.
சசிகுமாரின் 'கம்பெனி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: