சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த பேட்டியில் அவர் தெரிவித்த ஒரு கருத்துக்கு எதிராக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆதிநாதசுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள அந்த மனுவில், 'இந்து மதத்தை அவமதிக்கும் வகையில், மகாபாரதத்தை கமல்ஹாசன் அவதூறாகப் பேசியதாகவும் இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்னும்சில நிமிடங்களில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. ஏற்கனவே இதே காரணத்துக்காக கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு அமைப்பு சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: