“மேலை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்துள்ளது” என நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதிஹாசன். இசையமைப்பாளர், பாடகி, நடிகை என பன்முக திறமை கொண்ட ஸ்ருதி, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பிஸியான நடிகையாக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஸ்ருதி, சென்னையில் ஐஐடி.,யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ருதிஹாசன், “மேலை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்து தான் உள்ளது. தமிழகத்திலும் பெண்களுக்கான பாதுகாப்பில் பெருமளவு குறைபாடு உள்ளது. தண்டனைகளை கடுமையாக்கினால் தான் குற்றச்செயல்களை தடுக்க முடியும்'' என்றார்.


Post A Comment: