“நயன்தாரா தன்னுடைய கேரக்டரின் படப்பிடிப்பு முடிந்தவுடன் நேராக கேரவன் சென்று ஓய்வு எடுப்பவர் அல்ல. அவர் நடிக்காத காட்சிகளின் படப்பிடிப்பையும் உற்று கவனிப்பார். அவர் ஒரு அர்ப்பணிப்பு குணம் உடைய நடிகை. அவருடன் நடிக்கும் அனைவருமே இதை உணர்வார்கள்” என, ஹரிஷ் உத்தமன் தெரிவித்துள்ளார்.
“டோரா” திரைப்படத்தில் நயன்தாராவுடன் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ள ஹரிஷ் உத்தமன், நயன்தாரா குறித்து மேலும் கூறியதாவது,
“படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய காட்சி படப்பிடிப்பு தாமதம் ஆனாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பொறுமையுடன் காத்திருப்பார்.
“படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய காட்சி படப்பிடிப்பு தாமதம் ஆனாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பொறுமையுடன் காத்திருப்பார்.
அதேபோல் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வரக்கூடியவர். இதனால்தான் அவர் இன்னும் அனைவரும் போற்றும் நடிகையாக உள்ளார்” என்று கூறியுள்ளார்.
ஹரிஷ் உத்தமன் ஏற்கெனவே “தனி ஒருவன்” திரைப்படத்தில் நயன்தாராவுடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment: