தனுஷ் இயக்கியுள்ள முதல் படமான 'பவர்பாண்டி' திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
60 வயது பெரியவரான ராஜ்கிரணின் காதல், கோபம், பேத்திகளிடம் பாசம், ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம், ராஜ்கிரணின் முழு நடிப்புத்திறனை வெளிக்கொண்டு வரும் ஒரு படமாக அமைந்துள்ளது என்பதை டிரைலரின் மூலம் அறிய முடிகிறது.
தன சக வயது நண்பர்களிடம் அடிக்கும் கொட்டம், பேத்திகளிடம் காட்டும் பாசம், கும்பலோடு கும்பலாக ஆடும் டான்ஸ், முறைப்பான கண்கள், பிரசன்னாவிடம் வாங்கும் திட்டு என ராஜ்கிரண் தனது வழக்கமான பாணியை விட இருமடங்கு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரேவதி மற்றும் பிரசன்னா, சாயாசிங், டிடி ஆகியோர்களின் நடிப்பும் இயல்பாக உள்ளது. அதிக சப்தம் இல்லாமல் கிராமத்து பாணி ரம்மியமான பின்னணி இசை மனதை தொடுகிறது.
அதான் ஆட்டம் முடிஞ்சதே மாப்ளே என்ற குரலுக்கு 'இனிமேல்தாண்டி ஆட்டம் ஆரம்பம் என பதில் குரலாக வருகிறது தனுஷின் குரல். தனுஷின் ரசிகர்கள் இந்த டிரைலரை நிச்சயம் ரசித்திருப்பார்கள். மொத்தத்தில் முதல்மரியாதை'க்கு பின்னர் ஒரு டீசண்டான வயதான காதல் கதை தான் இந்த படம் என தெரிகிறது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: