சந்திரஹாசன் மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சங்கமும் அவரது மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர் நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களது ரெண்டாவது சகோதரர் சந்திரஹாசன் லண்டனிலுள்ள அவரது மகள் அனுஹாசனின் இல்லத்தில் நேற்று இரவு காலமானார் என்பதை அறிந்து வேதனையடைந்தோம். பால்யகாலம் முதல் கமல்ஹாசன் அவர்களுக்கு வழிகாட்டியாக, உறுதுணையாக, அவரது வளர்ச்சிக்கு காரணமாக இருந்து வந்தவர் சந்திரஹாசன்.
எனவேதான் அவரை தனது மூத்த சகோதரர் என்றில்லாமல் அப்பா என்றே எப்போதும் குறிப்பிடுவார். அப்பேர்ப்பட்ட அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறோம். அவரது இழப்பால் துக்கத்தில் வாடும் கமல்ஹாசன், முத்த சகோதரர் நடிகர் சாருஹாசன் மற்றும் அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களது ஆழுந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post A Comment: