Propellerads
Navigation

பாதுகாப்பாக பெண் மீட்பு

பதுளை- எல்ல பகுதியிலுள்ள சின்ன சிவனொளிபாதமலைக்குச் சென்று வழிதவறிய பெண்ணை, பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

வெளிநாட்டுப் பெண்ணொருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

குறித்தப் பெண், தன்னந்தனியாக, சின்ன சிவனொளிபாத மலைக்குச் சென்றுள்ளதுடன், வழிதவறிக் காட்டுக்குள் சென்றுள்ளார்.

இந்நிலையில், இரவு முழுதையும் காட்டுக்குள் கழித்த அவர், பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான
119க்கு அழைப்பை ஏற்படுத்தி, நிலைமையைத் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸார் மற்றும் பிரதேவாசிகள் இணைந்து, அப்பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
Share
Banner

Post A Comment: