Propellerads
Navigation

பிரபுதேவாவுடன் மீண்டும் ஆர்ஜே பாலாஜி

தேவி' படத்தில் பிரபுதேவாவுடன் ஆர்ஜே பாலாஜி
இயக்குனர் விஜய் இயக்கிய 'தேவி' படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்த நடித்த ஆர்ஜே பாலாஜி, மீண்டும் ஒரு படத்தில் அவருடன் இணைகிறார். அந்த படம் தான் 'யங் மங் சங்'.

'முண்டாசுப்பட்டி' இயக்குனர் ராம் மற்றும் 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் ஆகியோர்களிடன் உதவி இயக்குனராக பணியாற்றிய அர்ஜூன் இயக்கவுள்ள இந்த படத்தை 'நான் கடவுள்', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' ஆகிய படங்களை தயாரித்த வாசன் விஷுயூவல் வெண்ட்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

குங்பூ மாஸ்டர் வேடத்தில் பிரபுதேவா நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு நண்பராக ஆர்ஜே பாலாஜி நடிக்கவுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு தந்தையாக தங்கர்பச்சான் நடிக்கவுள்ளார்.

1970-80 களில் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதைப்படி தங்கர்பச்சான் தனது மகனை புரூஸ்லீ போன்று ஆக்க வேண்டும் என்று விரும்பி சீனாவுக்கு அனுப்புகிறார். அங்கு குங்பூ கலையை பயின்று நாடு திரும்பும் பிரபுதேவா, உள்ளூர் பிரச்சனையை எப்படி தீர்க்கின்றார் என்பதை காமெடியுடன் சொல்லும் கதைதான் 'யங் மங் சங்' கதை என்று கூறப்படுகிறது.

#ஆர்ஜேபாலாஜி #பிரபுதேவா #யங் மங் சங்
Share
Banner

Post A Comment: