Propellerads
Navigation

'போகன்' முதல்நாள் சென்னை வசூல் நிலவரம்

'தனி ஒருவன்' வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஜெயம் ரவி-அரவிந்தசாமி கூட்டணி இணைந்து நடித்த படமான 'போகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தின் முதல் காட்சி முடிந்தவுடன் பரவிய பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக அடுத்தடுத்த காட்சிகளுக்கு ரசிகர்களின் கூட்டம் அமோகமாக இருந்தது.

'ரோமியோ ஜூலியட்' இயக்குனர் லட்சுமணனின் வித்தியாசமான திரைக்கதையால் இந்த படத்திற்கு ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் சென்னை வசூல் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.

சென்னையில் முதல் நாளில் 'போகன்' திரைப்படம் ரூ.44 லட்சம் வசூல் செய்துள்ளது. ஜெயம் ரவியின் படங்களில் அதிகபட்சமாக சென்னையில் ஓப்பனிங் வசூல் செய்த முதல் படம் 'போகன்' என்ற பெருமையை பெறுகிறது.

நேற்று வியாழக்கிழமை வேலை நாளாக இருந்தபோதிலும் சென்னையில் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் 85% பார்வையாளர்கள் நிறைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாசிட்டிவ் ரிசல்ட் மற்றும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share
Banner

Post A Comment: