சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத்தின் 57ஆவது திரைப்படத்தின் பெயர் “விவேகம்” என்று அறிவிக்கப்பட்டு முதற்பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா - அஜீத் கூட்டணியில் வெளிவந்த “வீரம்”, “வேதாளம்” ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்ததால், இந்த திரைப்படத்தின் தலைப்பின் முதல் எழுத்தும் ‘V’ என்ற ஆங்கில எழுத்து முதலில் வரும்படிதான் தலைப்பு இருக்கும் என்று ஆணித்தரமாக கூறப்பட்டது.
அப்படி கூறப்பட்ட தலைப்புகளில் “விவேகம்” என்ற தலைப்பையே படக்குழுவினர் இறுதியாக முடிவு செய்து வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை 12 மணியளவில் இப்படத்தின் முதற்பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
இந்த முதற்பார்வைபோஸ்டரில் எல்லோரும் நினைத்ததுபோல் “விவேகம்” என்றே திரைப்படத்துக்கு தலைப்பு வைத்துள்ளனர். மேலும், அஜீத் தனது முரட்டு உடம்பை காட்டியபடி, மேல் சட்டை அணியாமல் இராணுவ காற்சட்டை அணிந்து காட்சியளிக்கிறார்.
Post A Comment: