Propellerads
Navigation

'கடுகு' விநியோக உரிமையை கைப்பற்றிய சூர்யா

ராஜகுமாரன், பரத், சுபிக்‌ஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கடுகு'. விஜய் மில்டன் இயக்கி, தயாரித்துள்ளார்.

வெளியீட்டு உரிமையை கொடுப்பதற்காக பல்வேறு முன்னணி தயாரிப்பாளர்களுக்கு திரைப்படத்தை திரையிட்டு காட்டி வந்தார் இயக்குநர் விஜய் மில்டன்.

இறுதியாக சூர்யாவின் '2டி' தயாரிப்பு நிறுவனம் இத்திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது.
மார்ச் முதல் வாரத்தில் திரைப்படத்தை வெளியிடும் முயற்சியில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.
Share
Banner

Post A Comment: