Propellerads
Navigation

'விவேகம்' டீசர் ரிலீஸ் எப்போது?

அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று அதிகாலை வெளிவந்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏறபடுத்திவிட்டது. கோலிவுட் திரையுலகினர் முதல் பாலிவுட் திரையுலகினர் வரை அஜித்தின் அட்டகாசமான கெட்டப்பை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் டீசர் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கவே இன்னும் நாள்கணக்கில் ஆகும் என்று கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வந்துள்ளது.

'விவேகம்' படத்தின் டிசர் அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும், இந்த படத்தின் இசை வெளியீட்டை மே மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் ஜூன் 22ஆம் தேதி ரம்ஜான் திருநாளில் விடுமுறை தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
Share
Banner

Post A Comment: