மேரிகோம், தோனி போன்ற விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றதை அடுத்து இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்பேன் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமும் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்தது. மற்ற திரைப்படங்களுக்கும் இந்த படத்திற்கு உண்டான ஒரே வித்தியாசம், இதில் சச்சின் தெண்டுல்கரே நடித்துள்ளார் என்பதுதான்.
ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப்புகழ் பெற்ற சச்சின் மற்றும் ரஹ்மான் இணைந்து பணியாற்றிய இந்த படம் வரும் மே மாதம் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. சச்சினை வெள்ளித்திரையில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post A Comment: