Propellerads
Navigation

விஜய் -முருகதாஸ் கூட்டணி உறுதியானது

நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையவுள்ளதாக  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

'துப்பாக்கி' மற்றும் 'கத்தி' ஆகிய திரைப்படங்கள் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி, தற்போது மீண்டும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை 'கத்தி' திரைப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனமே தயாரிக்க முன்வந்துள்ளது.

லைக்கா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் "இத்திரைப்படம் தற்போது மிகவும் தொடக்கநிலையில் உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் மட்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி திரைப்படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா நாயகியாக நடிக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் விசாரித்த போது, "மகேஷ்பாபு திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் திரைப்படத்தை இயக்குவது உறுதியாகியுள்ளது.

ஆனால், இது குறித்து வெளியாகி வரும் தகவல்கள் யாவும் உண்மையில்லை. கதை முடிவானவுடன் தான், மீதமுள்ள அனைத்துமே முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார்கள்.
Share
Banner

Post A Comment: