வெங்கட்பிரபு இயக்கத்தில்அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த “சென்னை 28“ திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாம்.
“சென்னை 28” மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இடத்தை பிடித்த இயக்குநர் வெங்கட்பிரபுவை . பிரியாணி, மாஸ் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஏமாற்றிவிட்டன.
அதனையடுத்து, “சென்னை 28“ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார். கலகலவென நகர்ந்த “சென்னை 28”ஐ இந்த முறையும் இரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்
யார் ஹீரோ, தொழில்நுட்ப கலைஞர்கள் என்று முடிவாகாமலேயே அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் ஒரு திரைப்படத்துக்கு அண்மையில் பூஜை போட்டார் வெங்கட்பிரபு.
அந்த திரைப்படம் சென்னை 28 இன் மூன்றாம் பாகம் என்று இன்றைய தினம் செய்தி வௌியாகியுள்ளது. எனினும் உத்தியோகபூர்வமாக இத்தகவலை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.
Post A Comment: