பிரபல பாலிவுட் இளம் நடிகை அலியாபட், 'ஹைவே', 2 ஸ்டேட்ஸ் உள்பட பல வெற்றி படங்களில் நடித்தவர். ராசியான நடிகை என இயக்குனர்களால் முத்திரை குத்தப்பட்டவர் என்றாலும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது அலியா பட்-இன் இன்னொரு பொழுதுபோக்கு. சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது கூறி நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்வது இவருக்கு சகஜம்.
அந்த வகையில் தற்போது மீண்டும் சமூக இணையதளவாசிகளிடம் சிக்கியுள்ளார். சமீபத்தில் ஒரு பிரபல பாலிவுட் பத்திரிகைக்கு கவர்ச்சியான புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். அதோடு மட்டும் நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அதே பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியும் கொடுத்துள்ளார். அதில் தனது அந்தரங்க விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். தான் ஒரு எளிமையானவர் என்பதால் தனக்கு செக்ஸில் கிளாசிக் மிஷனரி பொசிஷன் தான் பிடிக்கும் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார். இந்த பதிலை வைத்து அவரை நெட்டிசன்கள் பலமணி நேரமாக கலாய்த்து வருகின்றனர்.
மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க நேர்ந்தால் சுவர் எழுப்புவேன் என்றும் அப்படி செய்தால் தான் அவருடன் பேச வேண்டிய வேலை இருக்காது என்றும் கூறியுள்ளார்.
விளம்பர படப்பிடிப்பு தளத்தில் தான் ஒரு தலையணையை திருடியதாகவும், அந்த தலையனை இன்னும் தனது படுக்கையறையில் இருப்பதாகவும் இன்னொரு கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
Post A Comment: