Propellerads
Navigation

ஒரே நாளில் டப்பிங் பேசி முடித்த நயன்தாரா!


மாயா படத்தை அடுத்து நயன்தாரா நடித்துள்ள ஹாரர் படம் டோரா. இந்த படத்தை தாஸ்ராமசாமி இயக்கியுள்ளார். நயன்தாராவின் தந்தையாக தம்பி ராமைய்யா நடித்துள்ள இந்த படத்தில் ஹாரிஸ் உத்தமன் உள்பட சிலர் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு முதலில் டிக் டிக் டிக் என்றுதான் டைட்டீல் வைத்திருந்தனர். ஆனால் இதே டைட்டீலை ஜெயம்ரவி நடிக்கும் ஒரு படத்திற்கு ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்ததால் பின்னர் டோரா என்று பெயரை மாற்றினர்.

மேலும், இந்த படத்தில் பவளக்கொடி என்ற அந்த வேடத்தில் நயன்தாரா அந்த வேடத்தில் அதிக என்சாய் பண்ணி நடித்துள்ளாராம். அதோடு, சில நாட் களுக்கு முன்பு இந்த படத்திற்கான டப்பிங் பேச வந்த நயன்தாரா, தனக்கான மொத்த டயலாக்கையும் ஒரே நாளில் பேசி முடித்து விட்டாராம்.

குறிப்பாக, கேப் விட்டு பேசினால் பேசும் தொனி மாறக்கூடும் என்பதற்காக, மதியம் சாப்பிட கூட டப்பிங் தியேட்டரை விட்டு வெளியேறாமல், மைக் முன்பு நின்றபடி சாப்பிட்டுக்கொண்டே அதே பீலில் பேசி முடித்தாராம் நயன்தாரா.
Share
Banner

Post A Comment: