சமீபத்தில் தொலைக்காட்சி நடிகை சபர்ணா தனது வீட்டில் அலங்கோலமாக அழுகிய நிலையில் மரணம் அடைந்த சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் தற்போது அதேபோல் துணை நடிகை ஒருவரும் மரணம் அடைந்துள்ளார்.
தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் துணை நடிகையாக இருந்த 49 வயது ஜெயஸ்ரீ என்ற நடிகை அவருடைய சாலிகிராமம் வீட்டில் ஜெயஸ்ரீ போலவே இறந்து கிடந்தது போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஜெயஸ்ரீயை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கடந்த வெள்ளிக்கிழமைக்கு பின்னர் யாரும் பார்க்கவில்லை. இந்நிலையில் அவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததால் உடனடியாக காவல்துறையினர்களுக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் கொடுத்தனர்.
காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பார்த்தபோது ஜெயஸ்ரீ வீட்டின் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அலங்கோலமான நிலையில் ஜெயஸ்ரீ இறந்து கிடந்தது தெரிய வந்தது. மேலும் முதல்கட்ட விசாரணையில் அவர் முகத்தை மர்ம நபர் அல்லது நபர்கள் தலையணையால் அழுத்தி கொலை செய்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. மேலும் கொலை நடந்த இடத்தின் அருகே ஆணுறையும் இருந்ததாகவும் இந்த கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: