தமிழக முதல்வர் ஜெயலலிதா சற்று முன் காலமானார். அவரது காலமான செய்தி கேட்டு அதிமுக தொண்டர்கள் உள்பட தமிழக மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மருத்துவர்களின் உன்னிப்பான கவனிப்பில் இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனைத்து உயர்தர சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது.
ஆனால் நேற்று மாலை ஏற்பட்ட மாரடைப்புக்கு பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. சற்று முன்னர் (5-12-2016 11.30 P.M.) தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.


Post A Comment: