உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் சார்பில் 3ம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா மற்றும் மாநாடு வருகிற ஜனவரி 6ந் தேதி சென்னையில் நடக்கிறது. கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கும் இந்த மாநாட்டில் உலக தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழாவில உலகெங்கும் வாழும் வம்சாவளித் தமிழர்களின் வாழ்க்கை நிலை, எதிர்கால திட்டம், குறித்து பல்வேறு அறிஞர்கள் பேசுகிறார்கள். நிகழ்ச்சியின் இறுதி பகுதில் உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் சால்பில் உலக தமிழன் விருது இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்ககப்படுகிறது.
இதுகுறித்து இந்த அமைப்பு விடுத்துள்ள செய்தி குறிப்பில் "உலகத் தமிழன் விருதுக்கு சுந்தர்பிச்சை, சி அய்யாத்துரை, நவனீதம்பிள்ளை, ஏ.ஆர்.ரகுமான் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. பிறகு அனைவரின் ஒட்டுமொத்த ஒப்புதலுடன் ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
தமிழ் கலாச்சார தூதுவராகவும், அனைத்து தமிழ் பேசும் நாடுகளுக்கும் ரகுமான் பாலமாக செயல்படுவதாலும், ஆஸ்கர் விருது வென்று தமிழன் பெருமையை உயர்த்தி பிடித்ததாலும் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Post A Comment: