கேரளாவைச் சேர்ந்தவரான நயன்தாரா, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவராக இருந்தபோதும், பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள தயாராகிக்கொண்டிருந்தபோது இந்து மதத்திற்கு மாறினார்.
அப்போது கேரளாவிலுள்ள கிறிஸ்தவ அமைப்புகள் நயன்தாராவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், பிரபுதேவாவுடனான திருமணம் நின்று போனதும் அவர் மறுபடியும் கிறிஸ்தவ மதத்துக்கே மாறி விட்டார்.
மேலும், படப்பிடிப்புகளில் ஓய்வாக இருக்கும்போதே கேரவனுக்குள் அவ்வப்போது பிரேயர் செய்யும் நயன்தாரா, யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றாலும் அவர்களுக்காக பிரேயர் செய்கிறார்.
இந்த நிலையில், நேற்று கிறிஸ்துமஸ் தினம் என்பதால் தனது காதலரான டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கிறிஸ்து மஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் நயன்தாரா.
அதை போட்டோவுடன் டுவிட்டரில் பதிவு செய்துள்ள விக்னேஷ்சிவன், சந்தோசமும், நல்ல எண்ணங்களும் ஒவ்வொருவரின் வீட்டிலும் நிறைந்திருக்க தான் விரும்புவதாகவும் டுவிட் செய்துள்ளார்.
Post A Comment: