Propellerads
Navigation

வருடக் கடைசி வெளியீட்டில் 6 படங்கள்

2016ம் ஆண்டின் கடைசி வாரத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நாளை 30ம் தேதி வருகிறது. நாளைய தினம் “அச்சமின்றி, மோ, மியாவ், தலையாட்டி பொம்மை, ஏகனாபுரம், அதிரன்” ஆகிய ஆறு படங்கள் வெளியாக உள்ளன. ஒரு நாள் முன்னதாக இன்றே துருவங்கள் 16 படம் வெளியாகிறது.

இந்தப் படங்களையும் சேர்த்தால் இந்த ஆண்டும் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டிவிடும். நாளை வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்ட சில படங்கள் பின்னர் வேறு எந்த அறிவிப்பும் இல்லாமல் பின்வாங்கி விட்டன. ஆனால், பார்த்திபன் இயக்கியுள்ள கோடிட்டி இடங்களை நிரப்புக படத்தை மட்டுமே பொங்கலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்கள். இதனால் பொங்கலுக்கு வெளியாகும் படங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த வாரம் வெளியாகும் படங்கள் அனைத்துமே பெரிய பட்ஜெட் படங்களோ, பெரிய நட்சத்திரங்களின் படங்களோ அல்ல. அனைத்துமே சிறிய பட்ஜெட் மற்றும் சிறிய நட்சத்திரங்களின் படங்கள்தான். இவற்றில் துருவங்கள் 16, அச்சமின்றி, மோ ஆகிய படங்களுக்கு மட்டும் ஓரளவிற்கு அதிகமான தியேட்டர்கள் கிடைத்துள்ளன. இப்படிப்பட்ட சிறிய படங்கள்தான் தொடர்ந்து தியேட்டர்களுக்கு அடிக்கடி படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான படங்கள் ஓடினால்தான் திரையுலகம் இன்னும் செழிப்பாக இருக்க முடியும் என்கிறார்கள். அது ரசிகர்களின் கையில்தான் உள்ளது.

நாளை வெளியீட்டிற்குப் பிறகு பொங்கல் வரை குறிப்பிடத்தக்க அளவிற்கு புதிய படங்கள் வெளியாக வாய்ப்பில்லை.
Share
Banner

Post A Comment: