Propellerads
Navigation

'சென்னை 28' மூன்றாம் பாகத்தில் அஸ்வின்

பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகத்தை பாராட்டியதோடு, அந்த படம் தன்னுடைய வாழ்க்கையை திரையில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும், உண்மையிலேயே தானும் அந்த படத்தின் ஒரு கேரக்டராகவே இருந்தது போல் உணர்ந்ததாகவும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் 'சென்னை 28' மூன்றாம் பாகத்தில் அஸ்வினை வெங்கட்பிரபு நடிக்க வைப்பாரா? என்பதையும் தெரிவித்திருந்தோம். இந்நிலையில் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் அஸ்வினுக்கு பதில் கூறும் வகையில், 'உங்களை 'சென்னை 28' இரண்டாம் பாகத்தில் மிஸ் செய்துவிட்டேன். கண்டிப்பாக மூன்றாம் பாகத்தில் உங்களை நடிக்க வைக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே இரண்டு பாகங்கள் நல்ல வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது பாகத்தில் அஸ்வினும் இணைந்தால் அந்த படம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெங்கட்பிரபு அறிவிக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை.
Share
Banner

Post A Comment: