Propellerads
Navigation

உறவினர்கள், நண்பர்களைவிட ரசிகர்கள் ஏன் உயர்ந்தவர்கள்? விஜய் விளக்கம்

இளையதளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் அவர் மீது ரசிகர்கள் வெறித்தனமான அன்பு வைத்துள்ளனர் என்பதும் தெரிந்ததே,

இந்நிலையில் தனது ரசிகர்கள் மீது விஜய் எந்த அளவுக்கு மரியாதை வைத்துள்ளார் என்பது சமீபத்தில் அளித்த காமெடி நடிகர் சதீஷின் பேட்டியில் இருந்து தெரிய வந்துள்ளது.

தற்போது 'பைரவா' படத்தில் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடித்து வரும் சதீஷ், படப்பிடிப்பின்போது விஜய் தன்னுடைய ரசிகர்கள் குறித்து கூறியதை சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நமது சுகதுக்கங்களில் சொந்தக்கரங்க பங்கெடுக்கிறது பெரிய விஷயம் இல்ல. ஏன்னா, அவங்க நம்ம சொந்தம். அதே மாதிரி நமக்கு ஒண்ணுன்னா துடிச்சி போய் நண்பர்கள் வர்றதும் பெரிய விஷயம் இல்லை, ஏன்னா.. அவன் நம்ம நண்பன். ஆனா, ரத்தசொந்தம் எதுவும் இல்லாம, நாம அழுதா அழுறதுக்கும் சிரிச்சா சிரிக்கறதுக்கும் இருக்கற ரசிகர்களோட அன்பை நினைக்கும்போது அது ரொம்ப பெரிய விஷயமா இருக்கும். அவங்களோட அன்புக்கு நான் ரொம்பவே கடன் பட்டிருக்கேன். என்று கூறியுள்ளார். இந்த தகவலை நடிகர் சதீஷ் மிக உருக்கமாக கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: