ஏ தில் ைஹ முஸ்கில் படத்தில் தனது நடிப்பை பலரும் பாராட்டி வருவதால் ஏகத்திற்கும் சந்தோஷத்தில் இருக்கிறார், நடிகர் ரன்பீர் கபூர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய ரன்பீர் கபூர், நான் அனைத்தையும் சஞ்சய் லீலா பன்சாலியிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன் என்றார்.
மேலும், இந்த பாராட்டுக்கள் அனைத்தும் சஞ்சய் லீலா பன்சாலியை தான் போய் சேரும். அவர் தான் சினிமா பற்றிய அனைத்து விஷயங்களையும் எனக்கு கற்றுக் கொடுத்தார். அவருடன் இருந்த போது கிடைத்த அனுபவங்களே சினிமாவில் எனது நடிப்பிற்கு காரணம் என நினைக்கிறேன்.
உணர்வுகளை போதிக்கும் உண்மையான ஆசான் அவர். நடிப்பு மற்றும் உணர்வுகள் மூலம் அனைத்தையும் வெளிக்காட்ட வேண்டும் என அவர் எனக்கு கற்றுக் கொடுத்தார் என்றார். தற்போது ரன்பீர் கபூர் ஜாக்கா ஜசோஸ் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் 201மோ் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாக உள்ளது.


Post A Comment: