Propellerads
Navigation

தர்மதுரை படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிப்பு

விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' திரைப்படம் தமிழகத்தில் 75 நாட்களுக்கும் மேல் ஓடி சூப்பர் ஹிட் ஆகியது. அதுமட்டுமின்றி தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல விஐபிக்கள் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில் முதன்முதலாக விஜய்சேதுபதி நடித்த இந்த படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு விரைவில் வெளியாகவுள்ளதாக வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 'தர்மராஜூ எம்பிபிஎஸ்' என்பதுதான் இந்த படத்தின் தெலுங்கு டைட்டில்
ஆகும்.

விஜய்சேதுபதி தெலுங்கு ரசிகர்களுக்கு புதியவராக இருந்தாலும் தமன்னா தெலுங்கின் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். குறிப்பாக 'பாகுபலி' ரிலீசுக்கு பின்னர் தமன்னாவின் தெலுங்கு மார்க்கெட் அதிகரித்துள்ளது. எனவே இந்த படம் தெலுங்கிலும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share
Banner

Post A Comment: