Propellerads
Navigation

பிரபல இளம் இசையமைப்பாளருக்கு திருமணம்

மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பின்னர் சூர்யாவின் 'பசங்க 2' படத்திற்கு இசையமைத்த இளம் இசையமைப்பாளர் அரோல் கரோலி தற்போது மிஷ்கின் இயக்கி வரும் 'சவரக்கத்தி' மற்றும் 'துப்பறிவாளன்' படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையை அடுத்த மறைமலைநகரை சேர்ந்த அருள்முருகன் என்ற அரோல் கரோலிக்கு இன்று சிறப்பான முறையில் திருமணம் நடைபெற்றது. சென்னையில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் மணமகள் ரம்யாவை அரோல் கரோலி தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார். இந்த திருமணத்திற்கு கோலிவுட் பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

லண்டன் இசைக்கல்லூரியில் இசைத்துறை பட்டம் பெற்ற அரோல் கரோலி அடிப்படையில் ஒரு சார்ட்டட் அக்கவுண்டண்ட். ஆனால் இசைமீது உள்ள ஆர்வம் காரணமாக அக்கவுண்ட் துறையை விட்டுவிட்டு தற்போது முழுநேர இசையமைப்பாளராகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் இல்வாழ்க்கையை துவங்க போகும் அரோல் கரோலிக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
Share
Banner

Post A Comment: