Propellerads
Navigation

ஒருவரே பணம் எடுப்பதை தவிர்க்க விரலில் மை வைக்கப்படும்.

பிரதமர் திரும்ப பெற்ற ரூ.500, ரூ.1000ஐ வங்கியில் கொடுத்து ரூ.2000 புதிய நோட்டுக்களை மாற்ற ஒரு வாரம் ஆகியும் இன்னும் அனைத்து வங்கிகளிலும் கூட்டம் இருந்து கொண்டே உள்ளது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் புதிய பணத்தை பெற்றுக்கொண்டு மற்றவைகளுக்கு ஆன்லைன் பரிவர்த்தனையை கடைபிடிக்க வங்கிகளும், மத்திய அரசும் அறிவுறுத்தி வந்தபோதிலும் கூட்டம் குறைந்த பாடில்லை.

இந்நிலையில் கருப்புப்பணத்தை பிரித்து தனக்கு வேண்டியவர்களிடம் கொடுத்து புதிய நோட்டுக்களாக ஒருசில கருப்புப்பண முதலாளிகள் மாற்றுவதாகவும், இதற்காக கமிஷன் கைமாறப்படுவதாகவும் வெளியாகியுள்ள செய்தியை அடுத்து தற்போது மத்திய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

இதன்படி இனிமேல் ஒருவரே அடிக்கடி பணம் எடுப்பதை தவிர்க்க, பணம் எடுக்க வருபவர்களின் கையில் மை வைக்கப்படும் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய நிதித்துறை செயலர் உறுதி செய்துள்ளார். இந்த மை எப்போது முதல் வைக்கப்படும் என்பது குறித்த தகவல் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share
Banner

Post A Comment: