திருவிதாங்கூர் சிஸ்டர்ஸ் என்ற பெயரில் அப்போது நடன உலகை கலக்கிக் கொண்டிருந்தவர்கள் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள். உலக புகழ் பெற்ற நடன கலைஞர் உதய்சங்கர் அப்போது சென்னையில் கல்பனா என்ற பெயரில் நாட்டிய நாடகம் ஒன்றை சென்னையில் நடத்தினார். அதில் திருவிதாங்கூர் சிஸ்டர்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்கள். அதையே சினிமாவாக இந்தியில் தயாரித்துக் கொண்டிருந்தார் உதய் சங்கர்.
இதுபற்றி கேள்விப்பட்ட ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அப்போது தான் தயாரித்த வேதாள உலகம் படத்தில் லலிதா, பத்மினியை நடிக்க வைக்க விரும்பினார். இது தொடர்பாக பேசும்போது "நாங்கள் திருவிதாங்கூர் ராஜகுடும்பத்தை சேர்ந்தர்கள் ஆண்களை தொட்டு நடிக்க மாட்டோம் வேண்டுமானால் நடனம் ஆடுகிறோம்" என்றார்கள். எப்படியாவது அவர்களை நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்த செட்டியார் ஒரு தந்திரம் செய்தார்.
நீங்கள் ஆடினால் போதும் என்று சொல்லிவிட்டு வந்தவர் அவர்களுக்கென்று தனியாக ஒரு நாட்டிய கதையை உருவாக்கி அதை வேதாள உலகம் படத்தில் சேர்க்க திட்டமிட்டார். வேதாள உலகம் படத்திற்கு சம்பந்தமில்லாத நாட்டிய கதை அது. ஒரு பாம்பாட்டி தன் மனைவி தலையில் சூட்டி அழகு பார்க்க பூப்றிக்க போகிறான். அப்போது அவனை பாம்பு கடித்து விடுகிறது. ஓடிவந்த மனைவி பாம்பு கடித்த காலுக்கு பச்சிலை மருந்திட்டு கணவன் பிழைக்க வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடி வேண்டியபடி ஆடிப்பாடுவாள். கணவன் உயிர்பெற்று எழுவான் அதன் பிறகு இருவரும் மகிழ்ச்சி கூத்தாடுவார்கள். இது கதை. இந்த கதையை கே.டி.சந்தானம் எழுதினார். சுதர்சனம் இசை அமைத்தார். இந்த கதையில் பத்மினி பாம்பாட்டியாகவும், லலிதா பாம்பாட்டியின் மனைவியாகவும் நடித்து ஆடினர்.
படம் வெளிவந்த பிறகு வேதாள உலகம் கதையை விட இந்த பாம்பாட்டி கதைதான் அதிகமாக ரசிக்கப்பட்டது. அதன் பிறகும் சில படங்களில் ஆடிய பிறகு நடிகை ஆனார்கள் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: