இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சுவிஸ் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் டீசரை கோடிக்கணக்கான விஜய் ரசிகர்கள் உள்பட அனைத்து தரப்பினர்களும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த படத்தின் டீசர் தற்போது சென்சார் ஆகிவிட்டதாகவும் இந்த டீசருக்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சர்டிபிகேட் அளித்துள்ளதாகவும், டீசர் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 'பைரவா' படத்தின் திருவிழா பாடலின் வரிகள் வீடியோ முன்னணி தொலைக்காட்சியில் தீபாவளி அன்று அதிகாலை 12 மணிக்கு வெளியாகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: