ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் இருமுகன். இந்த படத்திற்காக முதன்முறையாக நயன்தாரா, நித்யாமேனன் ஆகிய இருவரும் விக்ரமுடன் இணைந்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஒரு சவாலான திருநங்கை வேடத்திலும் நடிக்கிறார் விக்ரம். அந்த வகையில், இதற்கு முன்பு தான் நடித்த சேது, காசி, பிதாமகன், ஐ படங்களில் வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்றிய விக்ரம், இந்த படமும் அந்த படங்களுக்கு இணையாக தனக்கு ஒரு மாறுபட்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்.
அதோடு, இதற்கு முன்பு திருநங்கை வேடங்களில் பல நடிகர்கள் நடித்திருந்தபோதும், இந்த படத்தில் தனது நடிப்பு தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பல படங்களை போட்டுப்பார்த்ததோடு, சில திருநங்கைகளின் யதார்த்த நடை உடை பாவணைகளை நேரில் பார்த்து, அதை உள்வாங்கி பர்பாமென்ஸ் கொடுத்து வருகிறாராம் விக்ரம். குறிப்பாக, திருநங்கை கெட்டப்பில் ஒரு புதுமையான மேனரிஸத்தை இந்த படத்தில் கடைபிடித்துள்ளாராம் விக்ரம்.
மேலும், விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் இருமுகன் படத்தின் படப்பிடிப்பு, சென்னை, மலேசியாவில் நடந்து வந்ததைத் தொடர்ந்து அடுத்தபடியாக காஷ்மீர், பாங்காங்கில் நடக்கவிருக்கிறது.

Post A Comment: