'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் இயக்குனராக சுசீந்திரன் அதன் பின்னர் நான் மகான் அல்ல', 'அழகர்சாமியின் குதிரை', 'பாண்டிய நாடு', உள்பட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் தற்போது இயக்கி வரும் 'மாவீரன் கிட்டு' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் இசைவெளியீடு வரும் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் பார்த்திபன் நடிக்கவுள்ளார். நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வர்டம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: